தமிழரசன் ஒரு ஆர்வமுள்ள எழுத்தாளர். இலக்கியத்தையும் இயற்கையையும் ஒரு சேர நேசிக்கும் இவர் பிறந்த ஊரான பெண்ணாகரம் எனும் செம்மண்ணின் மணம் மாறாத கவிஞன். இவரது வரிகள் போலவே எளிமையானவர். இவரது முதல் நூலான குடையிருந்தும் நனைந்தேன் கவிதை தொகுப்பு எவரையும் பின்பற்றாமல் தம் போக்கில் தனித்துள்ளவை. கற்பனையின் ஊற்றும் சொற்களின் ஆட்சியும் கவிதைகள் முழுவதும் காணுகின்றன. இவைகள் எதார்த்தம், எளிய அழகிய மொழிநடை, இயற்கையோடு இயைந்த வரிகள்.
புத்தகங்கள் மற்றும் பயணங்கள் மீது தீராத காதல் கொண்ட இவர் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலை முடித்துள்ளார். தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் மென்பொருள் பொறியியலாளர் (User Experience Engineer) ஆக பணியாற்றி வருகிறார்.
எதார்த்தமான வாழ்வியலையும் காதலையும் எளிய மொழிநடையில் இயற்கையோடு இயைந்து கவிதைகள் புனையும் இவர் தற்போது தனது இரண்டாவது நூலான நிலா நான் வானம் எனும் தொகுப்பை எழுதிக் கொண்டிருக்கிறார்.
Order your copy of Kudaiyirundhum Nanainthaen - paperpack
சில கவிதைகளை கடந்துப் போதல் கடினமானது, அவை நம் நினைவில் இருந்துக் கொண்டு எதையாவது நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கும், மனதை வருடிக் கொண்டே இருக்கும். அப்படியான கவிதைத் தொகுப்பு தான் இது - அமேசான் (Amazon) விமர்சனத்தில் இருந்து.
ஒவ்வொன்றும் கூறும் கதைகள்
பிரபஞ்ச அழகியலின் கூறுகள்